முகப்பு
மதுரை

திருப்பரங்குன்றம் அருகே 11 கிலோ கஞ்சா பறிமுதல்:  5 பேர் கைது

திருப்பரங்குன்றம் அருகே 11 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த மொத்தம் 5 பேரை, போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.  

Updated On : 21 மே, 2018 at 6:36 AM
பகிர்:

திருப்பரங்குன்றம் அருகே 11 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த மொத்தம் 5 பேரை, போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.  
     ஆஸ்டின்பட்டி காவல் நிலைய சார்பு-ஆய்வாளர்கள் பழனிச்சாமி, பார்த்தசாரதி ஆகியோர் தலைமையிலான போலீஸார், தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (32), வெங்கடேஷ் (33) ஆகிய இருவரும் அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். 
    அவர்களை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டதில், 5 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
     இதேபோல், அதே பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6  கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ரமேஷ், விமல், தமிழ்செல்வி ஆகிய 3  பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.