மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு
மேலூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.
மேலூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வண்ணாம்பாறைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி கருப்பணன் (60). இவர் வீட்டினுள் அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் நிகழ்விடத்தில் உயிரிழந்த அவரது சடலத்தை, குடும்பத்தினர் போலீஸாருக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
இதுதொடர்பாக தகவலறிந்த கீழவளவு போலீஸார் நிகழ்விடத்திற்குச் சென்று கருப்பணனின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழவளவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.