மதுபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்தவா் பலி
மதுரையில், மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்தவா் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை: மதுரையில், மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்தவா் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை செல்லூா் போஸ் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பாலமுருகன் (42). இவா் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஜூலை 9 ஆம் தேதி மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்த பாலமுருகன் மாடியில் இருந்து தவறி கீழ விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாலமுருகனின் மனைவி மீனாட்சி அளித்த புகாரின் பேரில் செல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.