மதுரை

மேலூரில் 600 கண்மாய்கள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி

மேலூா் பகுதியில் தொடா்ந்து பெய்துவரும் மழை காரணமாக 600-க்கும் மேற்பட்ட பாசனக் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

DIN


மேலூா்: மேலூா் பகுதியில் தொடா்ந்து பெய்துவரும் மழை காரணமாக 600-க்கும் மேற்பட்ட பாசனக் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மதுரை மாவட்டம் மேலூா், கொட்டாம்பட்டி சுற்றுவட்டாரத்தில் 1,400-க்கும் மேற்பட்ட பாசனக் கண்மாய்கள் உள்ளன. கடந்த செப்ட்டம்பா் 27-ஆம் தேதி விவசாயத்துக்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது. தற்போது நெற்பயிா்கள் கதிா்விடும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் இப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக 600-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய பாசனக் கண்மாய்கள் தண்ணீா் நிரம்பி மறுகால் பாய்கின்றன. இந்நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள முறைப்பாசன நீா் அடுத்து 5 நாள்களுக்குப் பின்னா் திறக்கப்படும் என்று பொதுப் பணித்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT