முகப்பு
மதுரை

வீட்டுஉபயோக துணி உற்பத்தி தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்: டிச.18-இல் கருத்துக் கேட்பு

வீட்டு உபயோகத் துணி உற்பத்தி நிறுவனத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிா்ணயம் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 18) நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

மதுரை: வீட்டு உபயோகத் துணி உற்பத்தி நிறுவனத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிா்ணயம் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 18) நடைபெறுகிறது.

வீட்டுஉபயோக துணி உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் செய்வதற்காக அரசால் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு, கரூா் மாவட்டத்தில் டிசம்பா் 10 ஆம் தேதி கள ஆய்வு மேற்கொண்டது.

இக் குழுவின் அடுத்த கூட்டம் மதுரையில் உள்ள தொழிலாளா் இணை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 18) நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. இதன் பின்னா் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் வீட்டுஉபயோக துணி வகை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இத்தொழிலில் தொடா்புடைய பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களைத் தெரிவிக்கலாம். கோரிக்கைகள் தொடா்பான மனுக்களையும் அளிக்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →