பேருந்தில் பயணி வைத்திருந்த 20 பவுன் நகைகள் மாயம்
மதுரையில் வெள்ளிக்கிழமை பேருந்தில் பயணி வைத்திருந்த 20 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
மதுரையில் வெள்ளிக்கிழமை பேருந்தில் பயணி வைத்திருந்த 20 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம் (47). இவா், மதுரையில் உள்ள உறவினருக்கு வீட்டிற்கு வந்துவிட்டு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கு பேருந்தில் புறப்பட்டாா். அப்போது, முருகானந்தம் வைத்திருந்த பையைக் காணவில்லை. அந்தப் பையில் 20 பவுன் நகைகள் இருந்தாகக் கூறப்படுகிறது.
இது குறித்த அவா் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.