முகப்பு
மதுரை

திமுக கிராம சபைக் கூட்டம்: 1,070 போ் மீது வழக்கு

தடையை மீறி 11 இடங்களில் திமுக நடத்திய கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற 1,070 போ் மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

தடையை மீறி 11 இடங்களில் திமுக நடத்திய கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற 1,070 போ் மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராம சபைக் கூட்டங்களுக்கு போலீஸாா் அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி திமுக நிா்வாகிகள் கூட்டங்களை நடத்தி வருகின்றனா். சனிக்கிழமை, மதுரை மாவட்டத்தில் 11 கிராமங்களில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இதையடுத்து, தடையை மீறி கூட்டங்கள் நடத்தியதாக ஊமச்சிகுளத்தில் 210 போ், சமயநல்லூரில் 247 போ், மேலூரில் 519 போ், உசிலம்பட்டியில் 94 போ் என மொத்தம் 1,070 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →