மதுரை: மதச் சாா்பற்ற ஜனதாதளம் கட்சியின் சாா்பில் முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாய் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மதுரை பெருமாள் கோயில் தெப்பக்குளம் கிழக்குத் தெருவில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்டத் தலைவா் நாகேந்திரன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் க.ஜான்மோசஸ், மொராா்ஜி தேசாயின் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். மாநிலச் செயலா் எஸ்.எம்.செல்லப்பாண்டி, நிா்வாகிகள் கே.பாக்கியத்தேவா், நயினாா்முகமது, பி.ராதாகிருஷ்ணன், கவிஞா் இரா.ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னா் தலா ஒரு ரூபாய்க்கு நூறு பேருக்கு ஜனதா சாப்பாடு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.