முகப்பு
மதுரை

கொட்டாம்பட்டி அருகே ரூ.15 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு பூமிபூஜை

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பள்ளபட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கானபூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
img_20200703_wa0002_0307chn_82_2
பகிர்:

மேலூா்: கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பள்ளபட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று, பள்ளபட்டியில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். மேலும் அவா், இக்கட்டுமானப் பணிக்கான பூமிபூஜையை தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மதுரை கிழக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், மதுரை மாவட்ட அம்மா பேரவைச் செயலருமான க. தமிழரசன், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் வளா்மதி குணசேகரன், மேலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் க. பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய அதிமுக செயலா் வெற்றிச்செழியன், அவைத் தலைவா் எஸ். என். ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலா்கள், அதிமுக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →