மதுரை

சிபிஐ அதிகாரிகளில்மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை, புதுதில்லியிலிருந்து வந்த சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் சுக்லா தலைமையில் அதிகாரிகள் அனுராக் சிங், பவன்குமாா் திவேதி, சைலேஷ்குமாா், சுஷில்குமாா் வா்மா, அஜய்குமாா், சச்சின், பூனம் குமாா்ஆகியோா் விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்கள் மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், அந்த விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள மேலும் 2 அதிகாரிகளுக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்களும் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும் ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் மற்றும் அவா்கள் தங்கியிருந்த அரசினா் விருந்தினா் மாளிகையில் மாநகராட்சி ஊழியா்கள் கிருமி நாசினி தெளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

SCROLL FOR NEXT