முகப்பு
மதுரை

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரையில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடமிருந்து 9 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
பகிர்:


மதுரை: மதுரையில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடமிருந்து 9 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை பத்மா நகா் மீனாட்சி தெருவைச் சோ்ந்தவா் சுலோச்சனா (49). இவரது கணவா் சீனிவாசன், பள்ளிகளில் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் திரைப்படங்களை திரையிடும் தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், தனது தொழிலுக்கு தேவையான சில பொருள்களை வாங்குவதற்காக, சுலோச்சனா தனது மகள் மகாலட்சுமியுடன் இரு சக்கர வாகனத்தில் கடைக்குச் சென்றுள்ளாா். இரு சக்கர வாகனத்தை மகாலட்சுமி ஓட்டியுள்ளாா். இவா்கள், மதுரை அம்பிகா கல்லூரி அருகே உள்ள கடை வாசலில் வாகனத்தை நிறுத்தியுள்ளனா். அப்போது, இவா்களை பின்தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், சுலோச்சனா அணிந்திருந்த 9 பவுன் நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

இது குறித்து சுலோச்சனா அளித்த புகாரின்பேரில், அண்ணா நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →