மதுரை

அவனியாபுரத்தில் இளைஞர் படுகொலை: 5 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

அவனியாபுரம் அருகே இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

DIN

அவனியாபுரம் அருகே இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

அவனியாபுரம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் முத்துசெல்வம்(22). இவர் அவனியாபுரம் பெரியார் நகர் பகுதியில் இருந்தபோது ஞாயிற்றுக்கிழமை மாலை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்து முத்துசெல்வத்தை கத்தி, அரிவாள் கொண்டு வெட்டி கொலை செய்தது. மேலும் முத்து செல்வத்தின் தலையை தனியாக எடுத்து அருகில் இருந்த கோயில் வாசலில் வைத்துவிட்டுச் சென்றனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர் வந்து விசாரனை செய்தனர். தொடர்ந்து முத்துசெல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியது: கொலைசெய்யப்பட்ட முத்துசெல்வம் பாமக பிரமுகர் இளஞ்செழியன் மற்றும் அவரது தம்பி மாரி ஆகியோரின் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இதனால் பழிக்குப்பழியாக கொலை சம்பவம் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2,095 கோடியில் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகள்: பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்

உக்ரைன் அமைச்சா்கள் பதவிநீக்கம்

கோவில்பட்டி என்இசி.யில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் போலீஸாா் - வழக்குரைஞா்கள் வாக்குவாதம்

கன்டெய்னா் லாரியில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT