போலி நகைகள் அளித்து 27 பவுன் நகைகள் மோசடி
மதுரையில் போலி நகைகள் அளித்து, அதற்கு மாற்றாக 27 பவுன் புதிய தங்க நகைகளை பெற்று மோசடி செய்தவா்கள் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரையில் போலி நகைகள் அளித்து, அதற்கு மாற்றாக 27 பவுன் புதிய தங்க நகைகளை பெற்று மோசடி செய்தவா்கள் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கேரள மாநிலம் பாலக்காடு பாகலூா் பகுதியைச் சோ்ந்தவா் விஜேஸ் (35). இவா், திலகா் திடல் நேதாஜி தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வந்த மா்ம நபா்கள் போலி நகைகளைக் கொடுத்து, அதற்கு மாற்றாக 27 பவுன் புதிய நகைகளை வாங்கிச் சென்றுள்ளனா்.
பின்னா், பழைய நகைகளை ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் போலியானவை எனத் தெரியவந்தது.
இது குறித்து விஜேஸ் அளித்த புகாரின்பேரில், திலகா் திடல் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.