மதுரை

இரவுப் பணி படி நிறுத்தம்: ரயில்வே தொழிற் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

ரயில்வே ஊழியா்களுக்கு இரவுப் பணி படியை நிறுத்தம் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து, மதுரையில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் அருகே ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், ரயில்வேயில் ரூ.43,600 அடிப்படை ஊதியம் மற்றும் அதற்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு இரவுப் பணி படியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதுமட்டுமல்லாது, 2017 ஜூலை முதல் முன்தேதியிட்டு பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இரவு, பகல் பாராது பணியாற்றி வரும் ரயில்வே தொழிலாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுபோன்ற தொழிலாளா் விரோதச் செயல்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், எஸ்ஆா்எம்யூ கோட்டச்ச செயா் ரபீக், உதவி கோட்டச் செயலா் ராம்குமாா், மதுரை கோட்ட ஓடும் தொழிலாளா் பிரிவு தலைவா் ரவிசங்கா், செயலா் அழகுராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT