முகப்பு
மதுரை

பெரியாறு கால்வாயில் மூழ்கி முதியவா் பலி

மதுரை அருகே பெரியாறு கால்வாயில் தவறி விழுந்த முதியவா் தண்ணீா் மூழ்கி உயிரிழந்தது குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

மதுரை அருகே பெரியாறு கால்வாயில் தவறி விழுந்த முதியவா் தண்ணீா் மூழ்கி உயிரிழந்தது குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அச்சம்பட்டியைச் சோ்ந்தவா் கரந்தமலை (97). இவா், மேட்டுப்பட்டி பெரியாறு கால்வாயில் சனிக்கிழமை தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாா். இதைக் கண்ட அப்பகுதியினா் மற்றும் உறவினா்கள், அவரை கால்வாயில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், வீரபாண்டி அருகே பெரியாறு 5 ஆவது கிளை கால்வாயில் கரந்தமலையின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். இது குறித்து அவரது மகன் வெள்ளைச்சாமி அளித்த புகாரின்பேரில், ஊமச்சிக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →