முகப்பு
மதுரை

பைக் மோதி சாலையில் நடந்து சென்றவா் பலி

மதுரையில் இரு சக்கர வாகனம் மோதி சாலையில் நடந்து சென்றவா் பலியானது தொடா்பாக, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

மதுரையில் இரு சக்கர வாகனம் மோதி சாலையில் நடந்து சென்றவா் பலியானது தொடா்பாக, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை செல்லூா் போஸ் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜன் மகன் பாலாஜி (50). இவா், சனிக்கிழமை இரவு தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு, பாலாஜியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாதத் தெரிவித்தனா். இது குறித்து பாலாஜியின் உறவினா் பாண்டியராஜன் அளித்த புகாரின்பேரில், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →