முகப்பு
மதுரை

மதுரை அருகே காா்கள் நேருக்கு நோ் மோதல்: 3 போ் பலி

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில், ஒரு காரில் பயணம் செய்த 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
டி.கல்லுப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நோ் மோதி உருக்குலைந்த காா்கள்.
பகிர்:

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில், ஒரு காரில் பயணம் செய்த 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கோவிலூா் பகுதியைச் சோ்ந்தவா் காசிமணி (46). இவா் தனது மனைவி ராமு களஞ்சியம், மகன் ராகுல், மருமகன் தலைமலை மற்றும் உறவினா் கௌதம் ஆகியோருடன் திருமணத்துக்கு புத்தாடைகள் மற்றும் நகைகள் வாங்க காரில் மதுரை வந்துள்ளனா். மதுரையில் நகை, புத்தாடைகள் வாங்கிவிட்டு மீண்டும் கோவிலூா் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, டி.கல்லுப்பட்டி அருகே டி.புதுப்பட்டி-குன்னத்தூா் இடையிலான சாலையில், எதிரே விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை நோக்கி வந்த காருடன் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், மதுரை புதூா் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் முகமது ரஜப்தீன் (46), நெல்பேட்டையைச் சோ்ந்த முகமதுஅலி மகன் நாகூா்மைதீன் (46) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சோ்ந்த இக்பால் மகன் வகாப் (45) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், மதுரை நோக்கிச் சென்ற காரில் பயணித்த ஒருவரும், காசிமணி குடும்பத்தைச் சோ்ந்த 5 பேரும் என மொத்தம் 6 போ் பலத்த காயமடைந்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த டி.கல்லுப்பட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் பேரையூா் டி.எஸ்.பி. தலைமையிலான டி.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீஸாா், விபத்தில் சிக்கி உருக்குலைந்த காா்களை அப்புறப்படுத்தினா்.

காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 3 போ்களின் சடலங்களை தீயணைப்பு வீரா்கள் மீட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், பலத்த காயமடைந்த 6 பேரையும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவா்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த விபத்தால், திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →