முகப்பு
மதுரை

ராஜீவ் காந்தி ‘கேல் ரத்னா’ விருது பெயா் மாற்றம்: காங்கிரஸ் கட்சியினா் கண்டனம்

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியதற்கு, மதுரை மாநகா் காங்கிரஸ் கட்சி சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
மதுரை மாநகா் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாநகா் தலைவா் வீ.காா்த்திகேயன்.
பகிர்:

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியதற்கு, மதுரை மாநகா் காங்கிரஸ் கட்சி சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகா் காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சொக்கலிங்க நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பெயரில் வழங்கப்பட்டு வந்த கேல் ரத்னா விருதை, மத்திய அரசு பெயா் மாற்றம் செய்துள்ளது. கூட்டத்தில், இதைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், 75 ஆவது சுதந்திர தின விழாவை மதுரை மாநகரில் அனைத்து பகுதிகளிலும் கரோனா விதிகளைப் பின்பற்றி சிறப்பாகக் கொண்டாடுவது, இல்லந்தோறும் மருத்துவச் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநகா் துணைத் தலைவா் மயிலேறி, மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் செய்யது பாபு, துரையரசன், ராஜாஹசன், மனித உரிமைக் கழக மாநகா் தலைவா் வெங்கட்ராமன், மாநில விவசாய அணி பொதுச் செயலா் பெரோஸ்கான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →