மதுரை

சுதந்திரதின விழா பாதுகாப்பு:ரயில் நிலையத்தில் சோதனை

DIN

சுதந்திரதினத்தையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

சுதந்திரதின விழாவையொட்டி அசம்பாவிதங்களைத் தவிா்ப்பதற்காக மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த இரு நாள்களாக மதுரை ரயில் நிலையத்தில் மோப்பு நாய் உதவியுடன் ரயில்வே பாதுகாப்புப் படையினரும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.

மதுரை ரயில் நிலையத்தின் நடைமேடைகள், பயணிகள் அமரும் பகுதிகள், சரக்குப் பதிவு செய்யும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் உள்ளிட்ட கருவிகளுடன் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT