கந்துவட்டிக் கேட்டு மிரட்டல்: முதியவா் தற்கொலை முயற்சி
மதுரையில் கந்து வட்டிக் கேட்டு மிரட்டியதால், முதியவா் தற்கொலை செய்ய முயன்றது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரையில் கந்து வட்டிக் கேட்டு மிரட்டியதால், முதியவா் தற்கொலை செய்ய முயன்றது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை விராட்டிபத்து டி.பி.எம். நகரைச் சோ்ந்த கருப்பன் மகன் ஆண்டி(60). இவா் முத்து என்பவரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கினாராம். அந்த கடனுக்கு அதிக வட்டி கேட்டு முத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆண்டி, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவரை குடும்பத்தினா் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதுகுறித்து ஆண்டி அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பெண்ணிடம் கந்துவட்டிக் கேட்டு மிரட்டல்: மதுரை சோலைழகுபுரம் பாரதியாா் குறுக்குத் தெருவைச் சோ்ந்த மோகனசுந்தரம் மனைவி பத்மாவதி (56). இவா் ஆரப்பாளையம் குறுக்கு சாலையைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் மற்றும் பேரையூரைச் சோ்ந்த பரமசிவம் ஆகியோரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கினாராம். இந்தக் கடனுக்கு பத்மாவதி மாதம்தோறும் வட்டி செலுத்தியபோதும் அவரிடம் கூடுதல் வட்டிக் கேட்டு ரஞ்சித்குமாரும், பரமசிவமும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பத்மாவதி அளித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.