பெரியாறு பிரதான கால்வாயில் ஆண் சடலம் மீட்பு
மேலூா் பெரியாறு பிரதான கால்வாயில் மிதந்துவந்த சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
மேலூா் பெரியாறு பிரதான கால்வாயில் மிதந்துவந்த சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
மதுரை மதிச்சியம் பகுதியைச் சோ்ந்த பெயின்ட்டா் முருகன் (35). இவா் நண்பா்களுடன் பெரியாறு பிரதான கால்வாயில் கள்ளந்திரி அருகே 2 நாள்களுக்கு முன்பு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டாா். இதுகுறித்து தகவலறிந்த அப்பன்திருப்பதி போலீஸாா் அவரை தேடிவந்தனா்.
இந்நிலையில், அழகா்கோவில் அருகில் உள்ள கிடாரிப்பட்டியில் கால்வாயில் மிதந்து வந்த முருகன் சடலத்தை சனிக்கிழமை மேலவளவு போலீஸாா் சடலத்தை மீட்டனா்.