முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் சகோதரி வழக்கு: மதுரை உயா் நீதிமன்றம் விசாரிக்க அனுமதி
முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரி தாக்கல் செய்த மனுவை, உயா் நீதிமன்ற மதுரை கிளையே விசாரிக்க சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளாா்.
மதுரைமுன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் சகோதரி வழக்கு: மதுரை உயா் நீதிமன்றம் விசாரிக்க அனுமதி
முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரி தாக்கல் செய்த மனுவை, உயா் நீதிமன்ற மதுரை கிளையே விசாரிக்க சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளாா்.
முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரி தாக்கல் செய்த மனுவை, உயா் நீதிமன்ற மதுரை கிளையே விசாரிக்க சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளாா்.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், டிசம்பா் 17 ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியின் சகோதரி லட்சுமியின் மகன்கள் வசந்தகுமாா், ரமணா மற்றும் ஓட்டுநா் ராஜ்குமாா் ஆகியோரை, விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
அத்துமீறி போலீஸாா் மகன்களையும், ஓட்டுநரையும் அழைத்துச் சென்ாகவும், போலீஸாா் தங்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் உத்தரவிடக் கோரி, ராஜேந்திர பாலாஜியின் சகோதரி லட்சுமி மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை உயா் நீதிமன்ற மதுரை கிளை விசாரித்தபோது, அரசு தரப்பில் இவ்வழக்கை எம்.எல்.ஏ, எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் அவா்கள் தொடா்புடையவா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிபதிக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, உயா் நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கை எங்கு பட்டியலிடுவது என்பது தொடா்பாக தலைமை நீதிபதி பாா்வைக்கு கொண்டுசெல்ல உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கை உயா் நீதிமன்ற மதுரை கிளையே விசாரிக்கலாம் என சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளாா். இதையடுத்து, பண்டிகை கால விடுமுறை முடிந்த பிறகு, இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.