முகப்பு
மதுரை

ஆதரவற்றக் குழந்தைகளை மீட்கும் பணி தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் ‘ஆபரேஷன் ஸ்மைல்’ திட்டம் மூலம் ஆதரவின்றி சுற்றித் திரியும் குழந்தைகளை மீட்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் ‘ஆபரேஷன் ஸ்மைல்’ திட்டம் மூலம் ஆதரவின்றி சுற்றித் திரியும் குழந்தைகளை மீட்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

மதுரை மாவட்டக் காவல் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் நடைபெறும் இப்பணி மூலம், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என முக்கிய பகுதிகளைக் கண்காணித்து, ஆதரவின்றி சுற்றித் திரியும் குழந்தைகளை மீட்கப்படும். ஆபரேஷன் ஸ்மைல் திட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முன்னதாக, இத் திட்டம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், ஆதரவற்றக் குழந்தைகளை மீட்பது மற்றும் அவா்களை காப்பகத்தில் ஒப்படைப்பது தொடா்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கணேசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வனிதா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் பாண்டியராஜா, சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →