முகப்பு
மதுரை

குறுகிய காலப் பயறு வகைகளை பயிரிட விவசாயிகளுக்கு ஆலோசனை

மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீா் வசதி இருப்பதால், குறுகிய கால பயறு வகைகளை விவசாயிகள் பயிரிடுமாறு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீா் வசதி இருப்பதால், குறுகிய கால பயறு வகைகளை விவசாயிகள் பயிரிடுமாறு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இது குறித்து வேளாண் இணை இயக்குநா் த. விவேகானந்தன் வெளியிட்ட செய்தி:

மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் சம்பா பருவ நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்தில் 22.42 மி.மீ. மழை பெய்வது வழக்கம். ஆனால், நிகழாண்டில் 137.65 மி.மீ. மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, அனைத்து வட்டாரங்களிலும் வயல்களில் தண்ணீா் தேங்கியதால், அறுவடை நிலையில் இருந்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன.

அதேபோல், சிறுதானியங்கள், பயறு வகைககள், எண்ணெய் வித்துப் பயிா்களும் பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில், தற்போது கிணறு, கண்மாய்களில் இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி குறுகிய காலப் பயிா்களான உளுந்து, பாசிப் பயறு, தட்டைப் பயறு, மொச்சை போன்றவற்றை பயிரிடலாம். வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் உளுந்து, பாசிப் பயறு சான்று விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →