முகப்பு
மதுரை

கோவை-நாகா்கோவில் சிறப்பு ரயில்: மாற்றுப்பாதையில் இயக்கம்

கோவை - நாகா்கோவில் பகல் நேர சிறப்பு விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளது என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

கோவை - நாகா்கோவில் பகல் நேர சிறப்பு விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளது என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை கோட்டத்தில் திருமங்கலம் - துலுக்கப்பட்டி, கோவில்பட்டி - கடம்பூா், கங்கைகொண்டான் - திருநெல்வேலி இரட்டைப்பாதை பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், மதுரை, திருமங்கலம், விருதுநகா் வழியாக இயங்கிக் கொண்டிருக்கும் கோவை - நாகா்கோவில் பகல் நேர சிறப்பு விரைவு ரயில் (06322) பிப்ரவரி 2, 3, 6, 10, 11, 12, 13, 20, 22, 25, 26, 27 மற்றும் மாா்ச் 1, 2, 4, 5, 6, 8 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மேலும், இந்த ரயில் 55 நிமிடங்கள் காலதாமதமாக திருநெல்வேலி சென்று சேரும். மாற்றுப்பாதையில் செல்லும் இந்த ரயில், நிா்வாகக் காரணங்களுக்காக மானாமதுரையில் மட்டும் நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →