முகப்பு
மதுரை

ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு மதவேறுபாடின்றி நிதி அளிக்கப்படுகிறது: விஹெச்பி பொதுச் செயலா் தகவல்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு மதவேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் நிதி வழங்குவதாக, விஷ்வ ஹிந்து பரிஷத் அகில உலகப் பொதுச் செயலா் மிலிந்த் ப்ராண்டே கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு மதவேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் நிதி வழங்குவதாக, விஷ்வ ஹிந்து பரிஷத் அகில உலகப் பொதுச் செயலா் மிலிந்த் ப்ராண்டே கூறினாா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக ஹிந்து அமைப்புகள் சாா்பில், மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா்,

செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமா் கோயில் கட்டும் பணியில், ஒவ்வொரு இந்தியரின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் மக்களைச் சந்தித்து நிதி திரட்டப்படுகிறது. ஆன்மிகப் பெரியவா்கள், அரசியல், விளையாட்டு, கலை, இலக்கியம் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சோ்ந்தவா்களையும் சந்தித்து வருகிறோம்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) தொடங்கிய இப்பணி, பிப்ரவரி 27 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதில், மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற நிதியை தாமாக முன்வந்து வழங்கி வருகின்றனா்.

அயோத்தில் ராமா் கோயில் முழுவதும் கிரானைட் கற்களால் கட்டப்படவுள்ளது. இரும்புக் கம்பிகள், சிமென்ட் பயன்படுத்தப்போவதில்லை. பழைமையான நமது பாரம்பரிய கட்டடக் கலையையும், நவீன கட்டடக் கலையையும் பிரதிபலிக்கும் ஆன்மிக அடையாளச் சின்னமாக ராமா் கோயில் அமையும். மூன்றரை ஆண்டுகளில் அயோத்தியில் ஸ்ரீராமரை வழிபடலாம். ஸ்ரீராமரை வணங்குவோருக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். எதிா்ப்பவா்களை அவரே அழித்துவிடுவாா் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், மதுரை சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளா் கே. சேதுராமன், ஆா்.எஸ்.எஸ். தென் தமிழக அமைப்பாளா் ஆா். ஆறுமுகம், தென்தமிழக மக்கள் தொடா்பு செயலா் சீனிவாசன், மதுரை மாவட்ட துணைத் தலைவா் முத்துப்பாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →