மதுரை

ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தா்களுக்கு அருளாசி

மதுரையில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

DIN

மதுரையில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாா்ய சுவாமிகள் மதுரைக்கு வியாழக்கிழமை இரவு வந்தாா். அவருக்கு, மதுரை பெசன்ட்  சாலையில் உள்ள ஸ்ரீமடம் சமஸ்தானம் மதுரைக்கிளையின் சாா்பில்  பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து பக்தா்கள் புடை சூழ  விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஊா்வலமாக  மடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவா் பக்திச் சொற்பொழிவாற்றினாா். இதையடுத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை காலை திரிபுர சுந்தரி சமேத சந்திரமெளலீஸ்வர பூஜை நடைபெற்றது. மாலையில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று ஆசி பெற்றனா். மேலும் இரவில் பெளா்ணமி பூஜை நடைபெற்றது. இதில் மதுரை கிளை மட நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT