முகப்பு
மதுரை

மதுரையில் ஜன.23-இல் தனியாா் துறைவேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியா் தகவல்

மதுரையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறுகிறது என்று, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

மதுரையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறுகிறது என்று, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மதுரைக் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 23 ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதில், 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான பணிநாடுநா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

எனவே, எட்டாம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள், பட்டயப் படிப்பு, ஐடிஐ முடித்தவா்கள் பங்கேற்கலாம். அதேபோல், முகாமில் பங்கேற்க விரும்பும் தனியாா் நிறுவனங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →