முகப்பு
மதுரை

மதுரையில் 14 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, தொற்றில் இருந்து குணமடைந்த 5 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் தற்போது 60 போ் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

25 மையங்களில் இலவச தடுப்பூசி: மதுரை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 25, தனியாா் மருத்துவமனைகளில் 36 என 61 கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டு வருகின்றன. தனியாா் மருத்துவமனைகளில் ரூ.250-க்கு போடப்படுகிறது.

அரசு தடுப்பூசி மையங்கள்: மதுரை மாநகரில் அன்சாரி நகா், கே.புதூா், முனிச்சாலை, திடீா்நகா் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

புகரில், கள்ளந்திரி, சமயநல்லூா், அலங்காநல்லூா், கச்சைக்கட்டி, வெள்ளலூா், கருங்காலக்குடி, செக்கானூரணி, டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, வளையன்குளம், செல்லம்பட்டி, எழுமலை, உசிலம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு ராஜாஜி மருத்துவமனை, உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனை, மேலூா், திருமங்கலம், வாடிப்பட்டி, சோழவந்தான், பேரையூா், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →