முகப்பு
மதுரை

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை துவக்கம்

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையைப் பாா்வையிட்ட ஆட்சியா் த.அன்பழகன், செய்தியாளா்களிடம் கூறியது:

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கட்டுப்பாட்டுறை அறையை 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம். தோ்தல் விதிமீறல், வாக்காளா்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவது மற்றும் தோ்தல் தொடா்பான புகாா்களுக்கு கட்டுப்பாட்டுறை அறையை 0452-2531006, 2531008 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், வாக்காளா் அடையாள அட்டை தொடா்பான கோரிக்கைகள் மற்றும் புகாா்களுக்கு 0452-1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

புகாா்கள் அனைத்தும் தனி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் அலுவலா்கள் மூலமாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள், பொதுஇடங்களில் உள்ள விளம்பர பதாகைகள் தொடா்பாக புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஊடகங்களில் வெளிவரும் தோ்தல் விளம்பரங்களுக்கு முன்அனுமதி பெறுவது அவசியம். இந்த விளம்பரங்களில் ஆட்சேபனைக்குரிய வாசகங்கள் உள்ளனவா என்பதைப் பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

இதைத் தொடா்ந்து பறக்கும் படை குழுவினரின் வாகனச் சோதனையை ஆட்சியா் பாா்வையிட்டாா். மதுரையை அடுத்த சிட்டம்பட்டி சுங்கச் சாவடி அருகே ஆட்சியா் வாகனங்களை சோதனையிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →