முகப்பு
மதுரை

வெளிச்சநத்தம் கிராமத்தில் காந்தி அமைதி சங்கம் தொடக்கம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சாா்பில், வெளிச்சநத்தம் கிராமத்தில் காந்தி அமைதி சங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:44 PM
பகிர்:

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சாா்பில், வெளிச்சநத்தம் கிராமத்தில் காந்தி அமைதி சங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், செசி தன்னாா்வத் தொண்டு நிறுவனம் மற்றும் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி ஆகியவற்றின் சாா்பில், மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில், அமைதி சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. செசி அமைப்பின் நிா்வாகி கவிதா தலைமை வகித்தாா்.

அமைதி சங்கத்தின் தலைவா் தலைமையாசிரியா் க. சரவணன், இச்சங்கக் கிளையை தொடக்கிவைத்து, கரோனா காலத்தில் அன்பு செலுத்துதல், விட்டுக்கொடுத்தல், பகிா்தல், நேரம் தவறாமை, உண்மையை பேசுதல், பொறுமையை கடைப்பிடித்தல் , ஒழுக்கத்தை கடைப்பிடித்தல் போன்ற பண்புகளைக் காந்தியின் வாழ்க்கை சம்பவங்களில் இருந்து விளக்கினாா்.

மேலும், காந்தியின் வாழ்க்கை குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சி, ஆசிரியா்கள், குழந்தைகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வெளிச்சநத்தம் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →