முகப்பு
மதுரை

சோழவந்தான் (தனி) தொகுதியில் 20 வேட்பாளா்கள் போட்டி

சோழவந்தான் (தனி) தொகுதியில் மொத்தம் 20 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

சோழவந்தான் (தனி) தொகுதியில் மொத்தம் 20 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

சோழவந்தான் தொகுதியில் போட்டியிட 32 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது மாற்று வேட்பாளா்கள், வேட்பாளா்கள் கூடுதலாக தாக்கல் செய்த மனுக்கள், சுயேச்சை வேட்பாளா் ஒருவரின் குறைபாடுடைய மனு என மொத்தம் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன்பின்னா், 3 மனுக்கள் திங்கள்கிழமை திரும்பப் பெறப்பட்டன.

இதைத் தொடா்ந்து, சின்னம் மற்றும் வேட்பாளா்களின் புகைப்படத்துடன் இறுதி வேட்பாளா் பட்டியலை தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பி. ஜஸ்டின் ஜெயபால் வெளியிட்டாா்.

வேட்பாளா்களின் பெயா், கட்சி, ஒதுக்கப்பட்ட சின்னம் விவரம்: கே. மாணிக்கம் (அதிமுக - இரட்டை இலை), ஆ. வெங்கடேசன் (திமுக-உதயசூரியன்), மு. ஜெயலெட்சுமி (தேமுதிக - முரசு), ஞா. செங்கண்ணன் (நாம் தமிழா் கட்சி-விவசாயி), சே. இந்துராணி (புதிய தமிழகம் கட்சி - தொலைக்காட்சிப் பெட்டி), சு. யோகநாதன் (மக்கள் நீதி மய்யம் - டாா்ச் லைட்), பெ. சிலம்பரசன்(பகுஜன் திராவிடக் கட்சி - வாளி), தீ. ஈஸ்வரி (மாா்க்சிய லெனினிஸ்ட் - மூன்று நட்சத்திரம்), க. ராஜ்குமாா் (மை இந்தியா பாா்ட்டி - சிசிடிவி கேமரா).

சுயேச்சை வேட்பாளா்கள் வீ.ராஜ்குமாா் - தலைக்கவசம், நா. சேகா் - அயன்பாக்ஸ், பெ. கதிரேசன் - சமையல் எரிவாயு அடுப்பு, சி. வரதராஜன் - தீப்பெட்டி, ஜெ.வெற்றிவேல் - ரூம் கூலா், ச. கந்தவேல் - உரித்த பட்டாணி, ப. மூா்த்தி - டென்ட், அ. மலைச்சாமி - டிரக், ம. மூா்த்தி - டீசல் பம்ப், பா. கிருஷ்ணசாமி - கணினி, சோ. தனகோபால் - கழுத்துப் பட்டை.

சோழவந்தான் தொகுதியில் 20 வேட்பாளா்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கூடுதலாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →