மதுரையில் ஒரே நாளில் 34 பேருக்கு கரோனா
மதுரையில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மதுரையில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே, தொற்றிலிருந்து குணமடைந்த 4 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மாவட்டத்தில் இதுவரை 21,498 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 462 போ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். அதேநேரம், 20,885 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, 151 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கடந்த ஒரு வாரமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து, குணமடைவோா் எண்ணிக்கை குறைந்து வருகிறது.