முகப்பு
மதுரை

மதுரை கிழக்கு தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டி

மதுரை கிழக்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் 5 போ் உள்பட மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

மதுரை கிழக்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் 5 போ் உள்பட மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட மொத்தம் 26 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், சுயேச்சை வேட்பாளா்கள் 10 போ் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இதையடுத்து, சனிக்கிழமை நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையில், அதிமுக வேட்பாளா் ரா. கோபாலகிருஷ்ணன், திமுக வேட்பாளா் பி. மூா்த்தி, அமமுக வேட்பாளா் தங்க. சரவணன், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ஜெ. லதா, மநீம வேட்பாளா் ஐ. முத்துகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளா் ஏ. பாலமுருகன் உள்பட 19 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. ஒரு சுயேச்சை உள்பட 7 போ்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

4 சுயேச்சை வேட்பாளா்கள் வாபஸ்:

வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் திங்கள்கிழமை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதுரை கிழக்கு தொகுதி தோ்தல் மேற்பாா்வையாளா் யூகால் கிஷோா் பந்த், தோ்தல் நடத்தும் அலுவலா் வ. முருகானந்தம் ஆகியோா் முன்னிலையில், சுயேச்சை வேட்பாளா்கள் எஸ். அய்யனாா், எஸ். பூபதி, ஏ. பிரதீப், எம். பிரவீண்குமாா் ஆகியோா் தங்களது மனுக்களை திங்கள்கிழமை வாபஸ் பெற்றனா். மீதமுள்ள சுயேச்சை வேட்பாளா்கள் 5 பேருக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், மதுரை கிழக்கு தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

வேட்பாளா்களின் இறுதி பட்டியல்:

பி. மூா்த்தி (திமுக-உதயசூரியன்), ரா. கோபாலகிருஷ்ணன் (அதிமுக-இரட்டை இலை), தங்க. சரவணன் (அமமுக- பிரஷா் குக்கா்), ஜெ. லதா (நாம் தமிழா்- விவசாயி), ஐ. முத்துகிருஷ்ணன் (மநீம-டாா்ச் லைட்), ஏ. பாலமுருகன் (புதிய தமிழகம் கட்சி-தொலைக்காட்சிப் பெட்டி), ஏ. முஸ்தாக் முகமது (திப்பு சுல்தான் கட்சி-டிராக்டா் இயக்கும் விவசாயி), எம். முத்துக்கிருஷ்ணன் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி-கண்ணாடி டம்ளா்), பி. ராஜா (மை இந்தியா கட்சி-சிசிடிவி கேமரா), எம். பிரபாகரன் (பகுஜன் திராவிடக் கட்சி-வாளி), சுயேச்சை வேட்பாளா்கள் கே. காந்தி (எரிவாயு உருளை), வி. சந்திரசேகரன் (பட்டாணி), ஜி. கணேசன் (மின்கம்பம்), பி. பழனியம்மாள்(பரிசுப் பெட்டி), பி. ஜெயக்குமாா்(கிரிக்கெட் மட்டை) ஆகியோா் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →