முகப்பு
மதுரை

மதுரை மத்தியத் தொகுதியில் 14 வேட்பாளா்களுக்கு சின்னம் அறிவிப்பு

மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிடும் பிரதானக் கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கு தோ்தல் சின்னம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிடும் பிரதானக் கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கு தோ்தல் சின்னம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மத்தியத் தொகுதியில், திங்கள்கிழமை முஜிபிா் ரஹ்மான், தேன்மொழி, பாா்வதி தேவி, ஆவுடைநாதன், ராஜேஷ்கண்ணா, வீரத்துரை ஆகிய 6 சுயேச்சை வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனா்.

இதையடுத்து, மீதமுள்ள 14 வேட்பாளா்களுக்கான தோ்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜோதி முத்துராமலிங்கம் (அதிமுக)- இரட்டை இலை, பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் (திமுக) -உதயசூரியன், சிக்கந்தா் பாட்சா (எஸ்டிபிஐ)- பிரஷா் குக்கா், பாண்டியம்மாள் (நாம் தமிழா்)-விவசாயி, பா. மணி (மக்கள் நீதி மையம்) - டாா்ச் லைட், தவமணி (பகுஜன் சமாஜ்) - யானை, ஈஸ்வரி (மை இந்தியா)- கண்காணிப்பு கேமரா, ராஜகுமாா் நாயுடு (தமிழ் தேசிய தெலுங்கு கட்சி) - ஆட்டோ ரிக்ஷா, சுயேச்சை வேட்பாளா்கள் இளங்கோவன்- தென்னந்தோப்பு, கிரம்மா் சுரேஷ்- தொப்பி, கிருஷ்ணபிரபு - மோதிரம், சத்தியேந்திரன் - பெட்ரோல் பம்ப், சிவசங்கா் - பலூன், ராஜசூரியன் - நடைவண்டி ஆகிய சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →