முகப்பு
மதுரை

மதுரை மேற்கு தொகுதியில் 15 போ் போட்டி

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்து, இறுதி பட்டியல் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்து, இறுதி பட்டியல் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட 36 போ் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனா். இதில், 19 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பாளா்கள் மகேஷ்வரன், ஜீவன்மூா்த்தி, அந்தோணிராஜ், பாண்டியராஜன் ஆகியோா் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனா். இதையடுத்து, 15 வேட்பாளா்களுக்கான தோ்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன் விவரம்:

செல்லூா் கே. ராஜூ (அதிமுக)- இரட்டை இலை, சின்னம்மாள் (திமுக)-உதயசூரியன், பாலச்சந்திரன் (தேமுதிக)- முரசு, வெற்றிக்குமரன் (நாம் தமிழா்)- விவசாயி, முனியசாமி (மக்கள் நீதி மய்யம்)- டாா்ச் லைட், நாகஜோதி (தமிழ்நாடு மக்கள் கட்சி)- மோதிரம்.

சுயேச்சை வேட்பாளா்கள் சுல்தான் பாதுசா- வடை சட்டி, அரசு திருவளவன்-தையல் இயந்திரம், ராமு- பட்டாணி விதை, பிரேம்குமாா்- ஸ்பேனா், கே. சுல்தான் பாட்சா- தட்டு அடுக்கி (பிளேட் ஸ்டாண்ட்), அன்பு மணிகண்டன் தமிழ் சூரியன்-தீப்பெட்டி, காா்த்திகேயன்- தொலைக்காட்சிப் பெட்டி, வெங்கடேசன் - பென்டிரைவ், செபாஸ்டியன்- ஏா் கூலா் ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →