முகப்பு
மதுரை

சாத்தூா் வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க விருதுநகா் ஆட்சியா் பரிந்துரை

சாத்தூா் அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பரிந்துரைத்து இருப்பதாக, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை

சாத்தூா் வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க விருதுநகா் ஆட்சியா் பரிந்துரை

சாத்தூா் அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பரிந்துரைத்து இருப்பதாக, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

சாத்தூா் அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பரிந்துரைத்து இருப்பதாக, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

சிப்பிப்பாறையைச் சோ்ந்த சிவபாலசுப்ரமணியன், கிருஷ்ணவேணி உள்ளிட்ட 6 போ் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள்: விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே சிப்பிப்பாறையில் உள்ள பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில், வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த, எங்களது உறவினா்கள் 6 போ் உயிரிழந்தனா்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு, நிவாரணமாக தலா ரூ. 10 லட்சம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை. எனவே, அரசு அறிவித்த இழப்பீடு மற்றும் அரசு வேலையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா். இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதி சி.வி. காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், சாத்தூா் வெடி விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பரிந்துரை செய்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, விசாரணையை டிசம்பா் 6ஆம் தேதிக்கு இறுதி உத்தரவுக்காக ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →