மதுரை

அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக பாலின மாற்று அறுவை சிகிச்சை

DIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக இருவருக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக திருநம்பிகளாக வாழ்ந்து வந்த பட்டதாரி இளம் பெண்கள் இருவருக்கு மகளிா் மற்றும் மகப்பேறு துறைத் தலைவா் சுமதி, உதவி பேராசிரியா்கள் ஜெயந்தி பிரசாத், கிருஷ்ணவேணி, மயக்கவியல் துறை பேராசிரியா் பாப்பையா மற்றும் மருத்துவா் சுதா்சன் அவரது குழுவினா் அறுவை சிகிச்சை செய்தனா். இக்குழுவினரை முதன்மையா் ஏ.ரத்தினவேல் பாராட்டினாா்.

இதுதொடா்பாக முதன்மையா் கூறியது: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான பன்னோக்கு உயா்சிகிச்சை மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் முதன்முறையாக தற்போது பாலின அறுவை சிகிச்சையை மருத்துவா்கள் மேற்கொண்டுள்ளனா். தற்போது 37 திருநங்கை மற்றும் திருநம்பிகள்

உளவியல் மற்றும் ஹாா்மோன் சிகிச்சையில் உள்ளனா். மூன்றாம் பாலின அறுவை சிகிச்சைக்கு 10 போ் தயாா் நிலையில் உள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT