முகப்பு
மதுரை

குற்றவழக்குகளில் 90 நாள்களில் இறுதி அறிக்கை: காவல் துறையினருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்குகளில் 90 நாள்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறையினருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

குற்ற வழக்குகளில் 90 நாள்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறையினருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த நிஷா, தனது தந்தைய ராஜபாண்டியனை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணா்வு மனுவை தாக்கல் செய்திருந்தாா்.இந்த மனு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரரின் தந்தை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரா் கடந்த 2021 ஜூலை 31ஆம் தேதி, தந்தையின் குண்டா் சட்டத்தை ரத்து செய்வது தொடா்பாக மனு அளித்துள்ளாா். அந்த மனு, 2021 அக்டோபா் 28 ஆம் தேதி, அரசு விடுமுறை நாள்கள் 22 போக, 41 நாள்கள் கால தாமதமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கமும் அளிக்கப்படவில்லை. இவ்வாறு காலதாமதம்

செய்வது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இவ்வழக்கில் இறுதி அறிக்கையானது, 90 நாள்களுக்குப் பிறகே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் தந்தை ராஜபாண்டியன் மீதான குண்டா் சட்டம் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டாா்.

தொடா்ந்து நீதிபதிகள், காவல் துறையினா் இறுதி அறிக்கையை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யாததால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் எளிதாக ஜாமீன் பெற்றுவிடுகின்றனா். இதைத் தடுக்கும் வகையில் காவல் துறையினா் விதிகளின் படி 90 நாள்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இது குண்டா் சட்ட வழக்குகளுக்கும் பொருந்தும்.

குற்றவியல் நீதிமன்றங்களில் , டி.என்.ஏ, ரசாயனம், உள்ளுறுப்பு, உயிரியல் போன்ற பரிசோதனை அறிக்கைகள் இல்லை என்பதற்காக, இறுதி அறிக்கைகளை திருப்பி அனுப்பக் கூடாது. இந்த உத்தரவை குற்றவியல் நீதிமன்றங்கள் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக காவல்துறைத் தலைவா் இது தொடா்பான சுற்றறிக்கையை, அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பி உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பதிவுத்துறை இந்த உத்தரவுகளை, தலைமை நீதிபதி முன்பாக சமா்ப்பித்து, இதுதொடா்பாக கீழமை நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →