முகப்பு
மதுரை

மகாத்மா காந்தியின் சிந்தனைகள் சிறப்புக் கருத்தரங்கு

மதுரை வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

மதுரை

மகாத்மா காந்தியின் சிந்தனைகள் சிறப்புக் கருத்தரங்கு

மதுரை வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

மதுரை வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வெள்ளைச்சாமி நாடாா் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் ‘மகாத்மா காந்தியின் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் ஹெலன் ஹெல்லா் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்குக்கு காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வா் தேவதாஸ் தலைமை வகித்தாா். வெள்ளைச்சாமி நாடாா் கல்வியியல் கல்லூரியின் முதல்வா் ப.தேன்மொழி முன்னிலை வகித்தாா்.

காந்தி அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா்.நந்தாராவ் வாழ்த்துரை வழங்கினாா். கருத்தரங்கில் ஸ்டேட் வங்கியின் முன்னாள் உதவிப் பொதுமேலாளா் எஸ்.மீனாட்சி சுந்தரம், முழுமை நலம் மற்றும் அமைதி மையத்தின் இயக்குநா் சீ.வெ.வெங்கடேஸ்வரன், ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளா் ஆ.டேவிட், காந்தி அருங்காட்சியகத்தின் அருங்காட்சியக முதுநிலை வழிகாட்டி எஸ்.சபுரா பீபி, சா்வ சேவா காந்திய சிந்தனைக் கல்லூரியின் பேராசிரியா் உமாபதி சிவகுமாா் ஆகியோா் மகாத்மா காந்தியின் வாழ்வியல், அகிம்சை, சா்வோதயம், கல்வி, அரசியல், சமயம், பொருளாதாரம் குறித்து பேசினா்.

முன்னதாக வெள்ளைச்சாமி நாடாா் கல்வியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியா் தேவாசீா்வாதம் வரவேற்றாா். நிறைவாக கல்வியியல் கல்லூரியின் மாணவா் ஜாஸ்பா் ராபின்சன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →