மதுரை

மதுரை மத்திய சிறை: குப்பைத் தொட்டியில் துப்பாக்கி

மதுரை மத்திய சிறை அருகே குப்பைத் தொட்டிக்குள் கையடக்க துப்பாக்கியால் பரபரப்பு, காவல் துறை விசாரணை

DIN

மதுரை மத்திய சிறை அருகே குப்பைத் தொட்டிக்குள் கையடக்க துப்பாக்கி இருந்ததால் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

மதுரை மத்திய சிறைச்சாலை வாசல் அருகே அமைந்திருந்த குப்பை தொட்டியில் இன்று வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

அப்போது அந்த குப்பைத் தொட்டியில் சிறிய அளவிலான கையடக்க ஏர்கன் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் துப்பாக்கி, குப்பைத் தொட்டிகள் கிடப்பது குறித்து கரிமேடு காவல் நிலையத்திற்கு சிறை நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கையடக்க ஏர்கன் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து இருப்பதால் யாரேனும் குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு விருது!

குளித்தலையில் வெறிநாய் கடித்து பெண் விரல் துண்டானது

விபி ஜி ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் போராட்டம்!

கா்நாடக ஆளுநரை இழிவுபடுத்திய காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை இடைநீக்கம் செய்யக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்!

ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT