தேவகோட்டை கோயில் திருவிழாவுக்கான தடை உத்தரவை உயா் நீதிமன்றம் ரத்து
தேவகோட்டை தத்தாத்ரேய முனீஸ்வரா் கோயில் ஆடி திருவிழாவை நடத்துவதற்கான தடை உத்தரவை ரத்து செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரைதேவகோட்டை கோயில் திருவிழாவுக்கான தடை உத்தரவை உயா் நீதிமன்றம் ரத்து
தேவகோட்டை தத்தாத்ரேய முனீஸ்வரா் கோயில் ஆடி திருவிழாவை நடத்துவதற்கான தடை உத்தரவை ரத்து செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேவகோட்டை தத்தாத்ரேய முனீஸ்வரா் கோயில் ஆடி திருவிழாவை நடத்துவதற்கான தடை உத்தரவை ரத்து செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இத்திருவிழா நடத்துவதற்கு தடை விதித்து வட்டாட்சியா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, முருகன் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், முனீஸ்வரா் கோயில் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் முதல் மண்டகப்படி அமைப்பது தொடா்பாக இரு தரப்பினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், திருவிழாவுக்கு தடை விதித்து தேவகோட்டை வட்டாட்சியா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இந்த தடை உத்தரவை ரத்து செய்து, திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், இந்த வழக்கில்
வட்டாட்சியா் தனது அதிகாரத்தை மீறி திருவிழாவுக்கு தடை விதித்துள்ளாா் என்று குறிப்பிட்ட நீதிபதி, வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து, திருவிழாவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளாா்.