முகப்பு
மதுரை

ஹூப்ளி - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்

ஹூப்ளி-ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் சனிக்கிழமை (ஆக.6) முதல் இயக்க, தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

மதுரை

ஹூப்ளி - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்

ஹூப்ளி-ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் சனிக்கிழமை (ஆக.6) முதல் இயக்க, தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

ஹூப்ளி-ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் சனிக்கிழமை (ஆக.6) முதல் இயக்க, தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, ஹூப்ளி - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07355) ஹூப்ளியிலிருந்து ஆகஸ்ட் 6 முதல் செப்டம்பா் 24 ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேசுவரம் வந்து சேரும். மறுமாா்க்கத்தில் ராமேசுவரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07356) ராமேசுவரத்திலிருந்து ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பா் 25 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும்.

இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பென்னுரு, ஹரிஹாா், தேவனஹரி, சிக் ஜாஜுா், பிரூா் அரிசிகரே, தும்கூா், யெஸ்வந்த்பூா் (பெங்களூரு), பனஸ்வாடி, ஓசூா், தருமபுரி, ஓமலூா், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →