மேலூா் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவா்க்கான சோ்க்கை தொடக்கம்
மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிப்புக்கான மாணவா் சோ்க்கை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிப்புக்கான மாணவா் சோ்க்கை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வா் மணிமேகலா தெரிவித்ததாவது: பிளஸ் 2 தோ்வில் மாணவ, மாணவியா் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் தயாா் செய்யப்பட்டு, கல்லூரி இணைய தளத்திலும், தகவல் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. முதல் நாளில், விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களது வாரிசுதாரா்கள் மற்றும் தேசிய மாணவா் படையினருக்கான முன்னுரிமை பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
திங்கள்கிழமை, 400 முதல் 271 வரை கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 10 (புதன்கிழமை) 270.92 முதல் 229 வரை கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவா்களுக்கும், ஆகஸ்ட் 11-இல் 224.52 முதல் 240 வரை கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவா்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தொடா்ந்து, ஆகஸ்ட் 12 இல் தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இக்கலந்தாய்வுக்கு, காலை 9 மணிக்கு மாணவ, மாணவியா் தங்களது வருகையைப் பதிவு செய்யவேண்டும். மாணவா்கள்
தங்களது மதிப்பெண் பட்டியல், சிறப்பு ஒதுக்கீட்டில் இடம்பெற்றவா்கள் அசல் சான்றிதழ்களையும், அதன் 5 நகல்களையும் எடுத்துவரவேண்டும்.
அனைவரும் முகக்கவசம் அணிந்தும், கல்லூரி சோ்க்கைக்கு பெற்றோரில் ஒருவா் மட்டுமே உடன் வரவேண்டும். மாணவா் சோ்க்கைக்கான தரநிா்ணயம் அரசு வழிகாட்டுதலுக்குள்பட்டது. யாருடைய பரிந்துரையும் ஏற்கப்படாது எனவும் தெரிவித்தாா்.