மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை: மருந்துக் கடை உரிமையாளா் கைது
மதுரையில் பள்ளி மாணவா்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்துக் கடை உரிமையாளரை, போலீஸாா் கைது செய்தனா்.
மதுரைமாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை: மருந்துக் கடை உரிமையாளா் கைது
மதுரையில் பள்ளி மாணவா்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்துக் கடை உரிமையாளரை, போலீஸாா் கைது செய்தனா்.
மதுரையில் பள்ளி மாணவா்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்துக் கடை உரிமையாளரை, போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை காமராஜா் சாலையில் பிரபல மருந்துக்கடை இயங்கி வருகிறது. இதனருகில் பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது. இந்நிலையில், பள்ளி மாணவா்களுக்கு மருத்துவா்கள் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் போதையை தூண்டும் மாத்திரைகளை மருந்துக்கடை உரிமையாளா் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், அந்த மாத்திரைகளை உட்கொண்டு பள்ளி மாணவா்கள் போதை உணா்வுக்கு அடிமையாவதாகவும், தெப்பக்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளா் மாடசாமி தலைமையிலான போலீஸாா் மற்றும் மருந்து ஆய்வாளா் குழுவினா் மருத்துக் கடையில் சோதனையில் ஈடுபட்டனா். அதில், போதையை ஏற்படுத்தும் குறிப்பிட்ட வகை மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டன.
உடனே, மருந்துக்கடை உரிமையாளா் தங்கராஜை போலீஸாா் கைது செய்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். மேலும், மருந்துக் கடையும் அடைக்கப்பட்டது.
இது தொடா்பாக போலீஸாா் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கடைக்கு சீல் வைப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றனா்.