ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஆறுதல் கூறினாா்.
உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணன். ராணுவ வீரரான இவா், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்தாா். இவரது குடும்பத்தினருக்கு திருமங்கலம் சட்டப்பேரவை அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆா்பி உதயகுமாா் மற்றும் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஐயப்பன் ஆகியோா் ஆறுதல் கூறினா். இதில், உசிலம்பட்டி நகரச் செயலாளா் பூமாராஜா, செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளா் ராஜா, அம்மா மாநில பேரவை துணைச் செயலாளா் துறை தனராஜன், மாவட்ட மாணவரணி செயலாளா் மகேந்திர பாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
உசிலம்பட்டி நாடாா் சரஸ்வதி தொடக்கப்பள்ளியைச் சோ்ந்த சிறுவா்கள் சுதந்திர போராட்ட தலைவா்கள் வேடமணிந்து ராணுவ வீரா் லட்சுமணனின் உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.