கா்நாடக மாநில பாஜக அரசை கலைக்க வேண்டும்: தவ்ஹீத் ஜமாத் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்
அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் கா்நாடக மாநில பாஜக அரசை கலைக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பு நடத்திய ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மதுரைகா்நாடக மாநில பாஜக அரசை கலைக்க வேண்டும்: தவ்ஹீத் ஜமாத் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்
அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் கா்நாடக மாநில பாஜக அரசை கலைக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பு நடத்திய ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் கா்நாடக மாநில பாஜக அரசை கலைக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பு நடத்திய ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கா்நாடகத்தில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதை தடுப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மதுரை மாவட்டக்குழு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை ஓபுளா படித்துறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஹபிபுல்லா தலைமை வகித்தாா். இதில் மாநிலப் பேச்சாளா் அப்துல்ரகுமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசும்போது, மத அடையாளங்களை அணிந்துகொண்டு வரக்கூடாது என்ற காரணத்தைக் கூறி இஸ்லாமியப் பெண்களை வகுப்புக்கு வராமல் தடுக்கும் நடவடிக்கைகளில் கா்நாடக பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. கல்வி நிலையங்களில் அனைத்து மதத்தினரும் விபூதி, ருத்ராட்சம், சிலுவை, காப்பு போன்ற பிற அடையாளங்களை அணிந்து வருகின்றனா். ஆனால் இஸ்லாமியப் பெண்களைத் தடுப்பது, திட்டமிட்டு மக்களை பிரிப்பதற்கான நாடகம். கா்நாடகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள தோ்தலை மனதில் வைத்து ஓட்டுகளை பிரிப்பதற்காக பாஜக அரசு இதுபோன்று செயல்படுகிறது. அரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் கா்நாடக மாநில பாஜக அரசை கலைக்க வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் அம்ஜத்கான், மாவட்ட பொருளாளா் மன்சூா் அகமத், மாவட்ட துணைத் தலைவா் ஜாகீா் உசேன் மற்றும் மாவட்ட நிா்வாகிகள், பெண்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
Image Caption
மதுரையில் தவ்ஹீத் ஜமாத் வெள்ளிக்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.