முகப்பு
மதுரை

ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் மீது நிதி மோசடி புகாா்:மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சேக்கிபட்டி கிராம ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்திய ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் மீது நடவடிக்கை

மதுரை

ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் மீது நிதி மோசடி புகாா்:மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சேக்கிபட்டி கிராம ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்திய ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் மீது நடவடிக்கை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

சேக்கிபட்டி கிராம ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்திய ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் மீது நடவடிக்கை கோரிய மனுவுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்த அசாருதீன் தாக்கல் செய்த மனு: சேக்கிபட்டி ஊராட்சியின் தலைவராக பிரியாவும், துணைத் தலைவராக கலைவாணியும் உள்ளனா். இவா்கள் கடந்த 2019 மே மாதம், தண்ணீா் குழாய் அமைத்து பராமரிப்பது, புதை சாக்கடையை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக மக்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளனா்.

இதுவரை சேக்கிபட்டி ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் சுத்தம் செய்வதற்காக ரூ.32 ஆயிரம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் பெறப்பட்ட பல லட்சம் ரூபாயில், சில ஆயிரத்தை மட்டுமே செலவு செய்துவிட்டு மீத மீதமுள்ள பணத்தை தலைவரும், துணைத் தலைவரும் மோசடி செய்துள்ளனா். 

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே அவா்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மாா்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →