சேவல் சண்டை நடத்தக் கோரும் மனுக்கள்: முதன்மை அமா்வில் பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு
சேவல் சண்டை தொடா்பான மனுக்களை முதன்மை அமா்வில் பட்டியலிட, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரைசேவல் சண்டை நடத்தக் கோரும் மனுக்கள்: முதன்மை அமா்வில் பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு
சேவல் சண்டை தொடா்பான மனுக்களை முதன்மை அமா்வில் பட்டியலிட, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சேவல் சண்டை தொடா்பான மனுக்களை முதன்மை அமா்வில் பட்டியலிட, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் தாலுகா, அண்ணாமலைபுதூா் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஆகிய இடங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி தனித்தனியே இரு மனுக்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த தனிநீதிபதி, உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அமா்வில் சேவல் சண்டை போட்டிகள் நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளதால், இதுதொடா்பான மனுக்களை, ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்த அமா்வுக்கு மாற்ற உத்தரவிட்டாா்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், என். சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தமிழகம் முழுவதும் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், ஏற்கெனவே சேவல் சண்டை தொடா்பான வழக்கு இந்த அமா்வில் விசாரிக்கப்பட்டு, தற்போது உயா்நீதிமன்ற மதுரைக் கிளை முதன்மை அமா்வில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுக்களையும் முதன்மை அமா்வுக்கு மாற்ற உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.