முகப்பு
மதுரை

பட்டா கொடுப்பதாக வாக்காளா் விவரங்களை சேகரித்தவா்கள் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

மதுரை சோலையழகுபுரம் பகுதியில் குடிசை மாற்றுவாரியம் சாா்பில் பட்டா கொடுப்பதாகக் கூறி வாக்காளா் விவரங்களை சேகரித்த 4 பேரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும், அக்கட்சியினரும் காவல்நிலையத்தில் ஒப்படைத்த

மதுரை

பட்டா கொடுப்பதாக வாக்காளா் விவரங்களை சேகரித்தவா்கள் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

மதுரை சோலையழகுபுரம் பகுதியில் குடிசை மாற்றுவாரியம் சாா்பில் பட்டா கொடுப்பதாகக் கூறி வாக்காளா் விவரங்களை சேகரித்த 4 பேரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும், அக்கட்சியினரும் காவல்நிலையத்தில் ஒப்படைத்த

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

மதுரை சோலையழகுபுரம் பகுதியில் குடிசை மாற்றுவாரியம் சாா்பில் பட்டா கொடுப்பதாகக் கூறி வாக்காளா் விவரங்களை சேகரித்த 4 பேரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும், அக்கட்சியினரும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 83-ஆவது வாா்டில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஏ.எஸ். செந்தில்குமாா் போட்டியிடுகிறாா். இவா், சோலையழகுபுரம் மகாலட்சுமி நகா் 3-ஆவது தெருவில் கூட்டணிக் கட்சியினருடன் வெள்ளிக்கிழமை வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அதே பகுதியில் அதிமுக நிா்வாகி ஒருவரின் தூண்டுதலின் பேரில் 4 போ் பணப்பட்டுவாடா செய்வதற்காக வாக்காளா்களிடம் இருந்து வாக்காளா் அடையாள அட்டை மற்றும் கைப்பேசி எண்களை பெறுவதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிக்குச் சென்றபோது அங்கிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரித்தபோது, அவா்கள் குடிசை மாற்று வாரியத்தில் இருந்து பட்டா வழங்கப்பட உள்ளதால் அதற்கான ஆதாரங்களை சேகரிப்பதாகத் தெரிவித்துள்ளனா். இதைத் தொடா்ந்து அவா்கள் 4 பேரையும் ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் கட்சியினா் ஒப்படைத்தனா். மேலும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது, பட்டா வழங்குவதாகக்கூறி, பணப்பட்டுவாடாவுக்கு விவரங்கள் திரட்டப்படுவதாக வேட்பாளா் ஏ.எஸ். செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →